சனி, 12 மார்ச், 2011

நெடுந்தீவு அமைவிடமும் பரப்பளவும்













யாழ்ப்பாணத்திலிருந்து மற்றெல்லாத் தீவுகளிலும் கூடிய
தொலைவில் அமைந்திருக்கும் தீவு இதுவே.
யாழ்ப்பாணத்திலிருந்து இதன் தூரம் 45 கிலோமீட்டர் ஆகும்.
ஆனால் இந்தியாவின் இராமேஸ்வரக்கரையிலிருந்து இதன் 
தூரம் 38 கிலோமீட்டர் மட்டுமே.இதன் அளவு வடக்குத் 
தெற்காக 6 கிலோமீட்டரும் கிழக்கு மேற்காக 8 
கிலோமீட்டரும் ஆகும். மொத்தப்பரப்பளவு அண்ணளவாக









நெடுந்தீவில் உள்ள ஊர்கள்
  1. ஆலங்கேணி
  2. பெரியான்துறை
  3. மாவலித்துறை
  4. பூமுனை
  5. சாமித்தோட்டமுனை
  6. வெள்ளை
  7. குந்துவாடி
  8. தீர்த்தக்கரை

நெடுந்தீவு பிரதேசச் செயலாளர் பிரிவு 
நெடுந்தீவு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்கில் அமைந்துள்ள ஒரு தீவை உள்ளடக்கியது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 6 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. நெடுந்தீவு என்னும் ஒரு தீவு மட்டுமே இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இத்தீவு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது. இலங்கைக் கரையில் இருந்து கடலுள் கூடிய தொலைவில் அமைந்துள்ள பிரதேசச் செயலாளர் பிரிவு இதுவேயாகும்.
இதன் பரப்பளவு 45 சதுர கிலோமீட்டர் ஆகும்


கிராம சேவையாளர் பிரிவுகள் 
கி.சே.இல                கிராம சேவையாளர் பிரிவு                                 நெடுந்தீவு J/1                           நெடுந்தீவு மேற்கு
J/2                           நெடுந்தீவு தெற்கு
J/3                           நெடுந்தீவு மத்தி மேற்கு
J/4                           நெடுந்தீவு மத்தி
J/5                           நெடுந்தீவு மத்தி கிழக்கு
J/6                           நெடுந்தீவு கிழக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக